தேனிலவில் யோகா!! -காஜல் செய்த காரியம்-
தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவுக்காக பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றார்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.
பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.
இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள்.
அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.