SuperTopAds

கொரோனா மரண பயம் காட்டிவிட்டது!! -தொற்றிலிருந்து மீண்ட தமன்னா தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor III

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்ட போது எனக்கு மரண பயம் ஏற்படடுள்ளது என்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் உள்ள அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்வாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது. 

நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. வைத்தியர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது என்றார்.