SuperTopAds

வட மாகாணத்திற்குள் அதிகளவில் நுழையும் யாசகர்கள்..! சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை, அதிகாரிகளும் கவனிப்பதில்லை. மக்கள் குற்ச்சாட்டு..

ஆசிரியர் - Editor I

வெளிமாவட்டங்களில் இருந்து யாசகம் பெறுவதற்காக வவுனியா மாவட்டத்திற்குள் வருவோரினால் கொரோனா தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

வவுனியா மாவட்டத்திற்குள் அண்மைய நாட்களில் குறிப்பாக தெற்கு பகுதியிலிருந்து அதிகளவு யாசகர்கள் நுழைந்துள்ளதுடன், நகருக்குள் நடமாடி யாசகம் பெற்று வருகின்றனர். 

வவுனியா பழைய பேருந்து நிலையம், மற்றும் நகர் பகுதிகளில் சில இடங்களிலும், குடியிருப்பு குளத்தின் ஓரங்களிலும் குடும்ப சகிதமாக வருகை தந்து எந்தவிதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப் பிடிக்காமல் தங்கி உள்ளனர். 

இதன் காரணத்தினால் வெளி மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ்ஸின் காவிகளாக இவர்கள் செயற்படக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

இதேவேளை ஆண், பெண், வித்தியாசமின்றி மது, அருந்துதல், தகாத வார்த்தைகள் பேசுதல், சண்டை போடுதல்,போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.