யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி கொரோனா மருத்துவமனையில் 40 இந்தியர்கள் உட்பட 50 ற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா மருத்துவமனையில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் தேவை நிமித்தம் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனினும் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 

இந்நிலையில் கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களிற்கும் தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றைய தினம் 

யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஒரு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்திய தொழிலாளர்களும் கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் 

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு