SuperTopAds

பெற்ற மகளை 3 முறை வன்புணர்வு புரிந்த தந்தை..! 54 வருடங்கள் கடூழிய சிறை, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு.. மாணவியின் ஆசிரியருக்கு பாராட்டு..

ஆசிரியர் - Editor I

பெற்ற மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தைக்கு 54 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு குற்றவாளியின் மனைவி வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த நிலையில் குற்றவாளி தனது மனைவியின் சகோதரியை சமயாசார திருமணம் செய்துள்ளார். 

இதன் பின்னர் 13 வயதான சிறுமி தனது சிறிய தாயாரின் பராமரிப்பில் கிளிநொச்சி சிவபாத கலையகத்தில் கல்வியை தொடர்ந்திருக்கின்றார். 

இதன்போது குறித்த பாடசாலையின் செந்திலிங்கம் பரமேஸ்வரி தனது மாணவிகளுக்கு விழிப்பூட்டல் செய்வதோடு வீட்டிலோ, வெளியிலோ தவறான எண்ணத்துடன் யாரும் நடந்துகொண்டால் 

உனடியாக தனக்கு அது குறித்து தொியப்படுத்துமாறு மாணவிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையின் நடத்தைகள் குறித்து 

அதிபரிடம் கூறியதை தொடர்ந்து அதிபரினால் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடன் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து 

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயத்தை பாரப்படுத்தினர். இதபடிப்படையில் கடந்த 2016ம் ஆண்டு மே 1ம் திகதி செப்ரெம்பர் 25ஆம் திகதிக்கும் இடையே 

திருமுருகண்டியில் 13 வயது நிரம்பிய தனது மகளை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் எதிரிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் 

சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை 2019ஆம் ஆண்டு ஒக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டது. வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 

எதிரி தலைமறைவாகி இருந்தார். அதனால் வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 241ஆம் பிரிவின் கீழ் 

வழக்கை எதிரியின்றி விசாரிக்க விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்றும் அனுமதியளித்தது. இந்த நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் 

4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு ஒன்று எதிரியைத் தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. எதிரியின் இரண்டாவது மனைவி கடந்த மே 25ஆம் திகதி புங்குடுதீவுக்குச் செல்ல இருப்பதையறிந்து 

பொலிஸாரும் சிவில் உடையில் அவருடன் பேருந்தில் பயணித்துள்ளனர். அவர் புங்குடுதீவு ஆலடியில் எதிரியைச் சந்தித்த போது, பொலிஸார் எதிரியைக் கைது செய்தனர்.

எதிரி வவுனியா மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை நாளாந்தம் எடுக்கப்பட்டது. 

ழக்கை வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார்.சிறுமி தனக்கு நடந்தவற்றை சாட்சியமளித்தார். 

பாடசாலை அதிபர், சிறுமியின் வகுப்பு ஆசிரியர், சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பொலிஸ் அதிகாரி சாட்சியங்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் நிபுணத்துவ சாட்சியம் என்பன மன்றில் முன்வைக்கப்பட்டன. 

தனது மகள் கூறுபவை அனைத்தும் பொய் என்று எதிரி கூண்டுச் சாட்சியமளித்தார். விசாரணைகளின் நிறைவில் வழக்குத்தொடுனர், எதிரி சார்பில் சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது. எதிரிக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனரால் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அதனால் அவரை குற்றவாளியாக மன்று அடையாளப்படுத்துகின்றது என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் அதிகபட்ச தண்டனையாக 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. 

அதனால் மூன்று குற்றங்களுக்கும் 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றத்துக்கும் 3 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். 

செலுத்தத் தவறின் தலா 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.ஒவ்வொரு குற்றத்துக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். 

அதனை வழங்கத் தவறினால் 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், தண்டனைத் தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சி சிவபாத கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை செந்திலிங்கம் பரமேஸ்வரி, மாணவிகளின் மீது கொண்டுள்ள அக்கறை 

மற்றும் அவரது பணிக்கு அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.