கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொலை, பெண் கிராமசேவகரின் கணவன் சந்தேகத்தில் கைது..!
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெண் கிராமசேவகரின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ம் திகதி மாலை 7 மணிக்கு பயணித்த கிராமசேவகர் இனம் தெரியாத ஒருவரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இறந்த கிராம சேவகருடன் கூடப்பணியாற்றும் ஓர் பெண் கிராம சேவகரின் கணவர் எனவும்
இவர்களிற்கு இடையில் கொடுக்கல் வாங்கல. இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.