ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி!! -அவரை சந்தித்தவர்களை பி.சி.ஆர் செய்ய அறிவுறுத்தல்-

ஆசிரியர் - Editor III
ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி!! -அவரை சந்தித்தவர்களை பி.சி.ஆர் செய்ய அறிவுறுத்தல்-

இந்தியாவின் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆளுநர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

கேரள ஆளுநர் கூறியிருப்பதாவது:- எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. டெல்லியில் கடந்த வாரம் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.