யாழ்.மாவட்ட செயலகத்தில் பாரிய கூட்டம் நடத்த முடியாது என்பதை எழுத்தில் கூறினேன்..! அதனை மீறியே கூட்டம் நடந்தது, சுகாதார வைத்திய அதிகாரி மனம் திறந்தார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எழுத்தில் வழங்கியபோதும் அதனை மீறியே மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடைபெற்றிருப்பதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் மாநகர எல்லைப் பகுதிக்குள் கலியாண மண்டபங்கள், உணவகங்கள், பேரூந்துகளிற்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துவிட்டு அதனை தடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அரசியல்வாதிகள் 200ற்கும் மேற்பட்டோர் மாவட்டச் செயலகத்தில் ஒன்றுகூடும்போது 

சுகாதார வைத்திய அதிகாரி உறக்கத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். இது தொடர்பில் வைத்திய அதிகாரி மேலும் விபரம் தெரிவிக்கையில், வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் 

இதனை நடாத்த முடியாது என்பது உண்மை அதற்கான வழிகாட்டலை சுகாதாரத் திணைக்களத்திற்கும் தெரிவித்து மாவட்டச் செயலாளருக்கும் எழுத்தில் அறிவித்தேன். இத்தனை பணிகளையும் மீறி கூட்டம் இடம்பெற்றது மட்டுமன்றி எமக்கு ஆலோசணை வழங்கும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இவற்றின் அடிப்படையில் எனது அதிகார எல்லைக்குள் நான் ஆற்றவேண்டிய பணியை ஆற்றினேன். எனப் பதிலளித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு