”திருமணத்திற்கு ரெடி” ஆனால் கணவர் அப்படி இருக்க வேண்டும்!! -அனுஷ்காவின் ஆசை இது-
தமிழில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளேன் என்றும், அப்படி ஒருவரை சந்திக்கும் போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார்.
அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமணம் குறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு:-
திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு எந்த அவசரமும் இல்லை. தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்.
பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும் போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். பெற்றோர் எனக்கு 20 வயதிலிருந்தே திருமணம் செய்துகொள்ளுமாறு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இப்போது அதுபோல் நிர்ப்பந்திப்பதை நிறுத்தி விட்டனர். எனக்கும் சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை என்றார்.