தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சித்த கடும் தமிழ்தேசியவாதிகள் அரசின் கிராமிய பொருளாதார மேம்பாட்டு குழு கூட்டத்தில் முன் வரிசையில்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கிராமிய பொருளாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை கடுமையான விமர்சனத்திற்குட்படுத்தியிருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணி, 

நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் ஆபிரகாம் சுமந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் 

மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் கிராமிய பொருளாதார திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நதியான கலந்துரையாடல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ்

மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் அங்கயன் இராமநாதன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு