மொட்டையான ஆயுதத்தால் தலையில் பல தடவை தாக்கியே கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொலை..! இரு கோணங்களில் விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I

மன்னார் கள்ளியடி பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு மாந்தை மேற்கு கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு கோணங்களில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற மரண விசாரணைகளில் மரக்கட்டை போன்ற மொட்டையான ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தலையில் தாக்கப்பட்டே கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலகரின் தனிப்பட்ட விரோதம் அல்லது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம அலுவலகராகக் கடமையாற்றும்

விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார். அதன்பின்னர் ஆத்திமோட்டை கள்ளியடியில் தலையில் பலத்த காயங்களுடன் 

சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

சம்பவம் நடந்த பகுதிக்கு மன்னார் மாவட்ட பதில் நீதிவான் இ.கயஸ் பல்டானோ நேற்று புதன்கிழமை மதியம் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டார். சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், திடீர் இறப்பு விசாரணை அதிகாரி றொஜன் ஸ்ரலின் ஆகியோரும் 

சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். நிர்வாக கிராம அலுவலகர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன குருதிக் கறையுடன் காணப்பட்டன. சடலம் நேற்று மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் 

முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது.நிர்வாக கிராம அலுவலகரின் தலையில் தட்டையான பொருள் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியமையால் அவர் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நிர்வாக கிராம அலுவலகருக்கு நிர்வாக ரீதியில் தனிப்பட்ட பகை இருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அந்தப் பகை அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாமா? அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இருக்கலாமா? 

என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் இலுப்பக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு