சினிமாவை விட்டு விலகும் காஜல் அகர்வால்!! -அதிர்ச்சியில் ரசிகர்கள்-
நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவ் வெளியாகியுள்ளது. இவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றினை மையமாக வைத்தே மேற்படி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதுபோல் இருப்பதாக பரபரப்பாகி உள்ளது.
அந்த பதிவில். “இது தாமதமான முடிவுதான். இந்த முடிவை நான் முன்பே எடுத்து இருக்க வேண்டும். உலகத்துக்கு தெரிகிற மாதிரி கடிதமாக வெளியிட வேண்டி வந்துள்ளது என்று குறிப்பிட்டதை கொண்டே அவர் நடிப்பதில் இருந்து விலகவுள்ளார் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.