ஆபத்தை தேடி சென்று வாங்கிவரும் கஞ்சா கடத்தல்காரர்கள்..! இன்று அதிகாலையிலும் தமிழகம் சென்று திரும்பிய இருவர் கைது..

ஆசிரியர் - Editor I

நாடு முழுவதும் கொரோனா பரவும் அச்சம் நிலவும் நிலையில் கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து கஞ்சா கடத்திவந்த இருவரை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றின் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையினர். குறுத்த படகை வழிமறித்து சோதனையிட்டபோது குறித்த படகு தமிழகம் சென்று கஞ்சா கடத்திவந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன். சுமார் 98 பொதிகளில் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு