மும்பை விமான நிலையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ள தீவிரவாதிகள் !!
இந்தியாவில் உள்ள மும்பை விமான நிலையத்தின் மீது எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவலை தொடர்ந்து மும்பை விமான நிலையத்துக்கு அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில் டிசம்பர் 26ஆம் திகதி மும்பை விமான நிலையத்தில் சில தீவிரவாத அமைப்புகளால் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து தற்போது மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.
தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த 22பேரை தேர்வு செய்துள்ளதாக அறிந்துள்ளோம். இத்தாக்குதலுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒவ்வொரு செயலுக்கும் ரூ.20இலட்சம் வெகுமதி என தீவிரவாத அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.