SuperTopAds

150 ஆசிரியர்கள்,10 மாணவர்களுக்கு கொரோனா!! -செவ்வதறியாது திகைக்கும் அதிகாரிகள்-

ஆசிரியர் - Editor III

ஆந்திர மாநிலத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும்,10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று  வேகமாக பரவி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

நோய்  பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இதையடுத்து ஆந்திராவில் கடந்த 2  ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு பாசடாலைகள் திறக்கப்பட்டு 9,10ம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாடசாலைகள் திறந்து 3 நாட்கள் ஆன நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.