யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள் குழு..! அவர்களுக்கும் தனிமைப்படுத்தல் உண்டா..?

ஆசிரியர் - Editor I

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அபாய நிலையை கருத்தில் கொள்ளாது இருபதிற்கு மேற்பட்ட தெற்கு அமைச்சர்களை கொண்ட குழு யாழ்.நோக்கி வருகை தர ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக தெற்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய குழு 

எதிர்வரும் 6மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகன ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெறுவதாக அறியக்கிடைத்தது.

நாட்டில் தற்போது நிலவி வரும் ஒரு அபாய சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த குழு கொழும்பிலிரந்து யாழ்.நோக்கி வரும் ஏற்பாடு சுகாதார நடைமுறைகள் தொடர்பில் 

பலத்த கேள்வியை எழுப்புகின்றது.வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்த அளவுக்கு உட்படுத்தப்படுவார்கள் என 

வடமாகாண சுகாதார தரப்புகள் அறிவித்துள்ள நிலையில் கொழும்பிலிரந்து யாழ்.நோக்கி வருகை தரவுள்ள அமைச்சர் குழு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா?

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு