சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பேணுவதில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடக்கவில்லை..! நாட்டை முடக்குவது குறித்த பேச்சுக்கு ஜனாதிபதி தடாலடி பதில்..

ஆசிரியர் - Editor I

மக்கள் பொறுப்புணர்வுடன் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் நாட்டை முடக்கும் அவசியம் எழப்போவதில்லை. என கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படாது எனவும் கூறியுள்ளார். 

இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் பழக்கம் மக்களிடம் குறைவாக உள்ளது. 

மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பொறுப்புணர்வுடன் பின்பற்றினால் நாடு முடக்கப்படும் நிலையே அவசியமற்றது. எது எவ்வாறிருப்பினும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றியவாறு மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பவேண்டும். 

அதற்கான தயார்ப்படுத்தல்களை செய்யவேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு