SuperTopAds

சட்டவிரோத செயல்களுக்கு எதிராக போராடிவந்த கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் குரூர கொலை..!

ஆசிரியர் - Editor I

மன்னார் - மாந்தை மேற்கு கள்ளியடி பகுதியில் கிராம நிர்வாக உத்தியோகஸ்த்தர் ஒருவர் இனந்தொியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை பாண் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தவேளை இனந்தெரியாதவர்கள் எஸ்.விஜயேந்திரன் என்ற குறித்த கிராம நிர்வாக உத்தியோகத்தரை

கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாந்தை மேற்கில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு உட்பட 

சமூகவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் விஜயேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.