SuperTopAds

மாகாண கல்வியமைச்சு ஆழ்ந்த உறக்கத்தில்..! வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் மோசடியை பிடித்தது மாகாண கணக்காய்வு பிரிவு, பலருக்கு தொடர்பு..

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் தலமையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. 

குறித்த கல்வி வலயத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படும் ஒருவரும் குறித்த வலயத்தில் பணியாற்றும் மேலும் சிலரும் இணைந்து

குறித்த 1.8 கோடி ரூபாய் மோசடியில் இடம்பெற்றிருப்பதாக மாகாண கல்வியமைச்சு தகவல்கள் கூறுகின்றன. மேலும் 1.8 கோடி ரூபாய் மோசடி விடயத்தையே 

மாகாண கணக்காய்வு குழு கண்டறிந்துள்ள நிலையில் அங்கு 3 கோடிக்கும் மேல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. 

இதேவேளை குறித்த முகாமைத்துவ உதவியாளர் தலமையிலான குழு 8 ஆசிரியர்களின் பெயரில் மாதாந்த ஊதியத்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் குறித்த முகாமைத்துவ உதவியாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டபோதும் வலய கல்வி பணிப்பாளர் அதனை தடுத்துவந்துள்ளதுடன், 

அதேபோல் குறித்த முகாமைத்துவ உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதன் பின்னரும் வலய கல்வி பணிமனை ஊழியர் ஒருவர் ஊடாக அதே முகாமைத்துவ ஊழியர் சம்பள பட்டியல் தயாரித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த விடயம் மாகாண கல்வி பணிமனை, மற்றும் ஆளுநர் அலுவலகம், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், 

ஓடி முழித்துள்ள மாகாண கல்வியமைச்சு விசாரணைகளை துரிதப்படுத்தியிருக்கின்றது.