இந்துவின் மைந்தர்களின் சமர் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான ‘இந்துவின் மைந்தர்களின் பெருஞ்சமர்’ என்று வர்ணிக்கப்படும் மாெபரும் வருடாந்த கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
கடந்த 1981ஆம் ஆண்டு ஆரம்பமான இப்போட்டியானது நாட்டின் சூழ்நிலை காரணமாக இடையில் பல ஆண்டுகள் நடைபெறாமலிருந்தது. இந்நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள இப் போட்டியானது ஒன்பதாவது முறையாக நடைபெறவுள்ளது.
இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் 3 முறை கொழும்பு இந்துக்கல்லூரி அணியும், ஒருமுறை யாழ். இந்துக் கல்லூரி அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில் நான்கு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைவந்துள்ளன.
இப் போட்டித் தொடரில் இவ்விரு அணிகளும் மிகக் கடுமையான போட்டியை எதிரணிக்கு கொடுத்து வருகின்றன. தற்போது கடும் பயிற்சியின் மூலம் இரு கல்லூரி அணிகளும் பலம்பொருந்திய அணிகளாகக் காணப்படுவதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி விபரம்
எம்.கோபிராம் (அணித் தலைவர்), கே.சந்தோஷ் (உபதலைவர்), என்.ஐங்கரன், கே.நிகேஷ், ஈ.பரிமளன், யூ.மிலுக்ஸன், எஸ்.தனுஷ்டன், கே.கோமிந்தன், எல்.சிவகல்ஸன், ஜே.லினுஷங்கரன், வை.விதுஷன், எஸ்.ஆஞ்சிகன், எஸ்.பிருந்தாவன், பி.ஜெயபிரகாஷ்,
எஸ்.சந்துரு, எஸ்.சருஜன், யூ.கேதீஸ், கே.விதுர்ஷன், பி.கஜநாந்த்.
கொழும்பு இந்துக் கல்லூரி அணி விபரம்
எஸ்.ஷரோன் (அணித் தலைவர்), எம்.ஹரேஷன், பி.ஆகாஷ், எஸ்.தனுஷன், எம்.அனுஷன்ராஜ், ஏ.ஹரிஹரன், எஸ்.முகுந்தன், ஆர்.சேவாக், எஸ்.ஹரேந்திரன், வீ.கிஷோன், எம்.பிரவீன்குமார், எஸ்.மயூரன், ஜீ.தினேஷ், பி.விராஜ், எஸ்.கெனிஷான்.