SuperTopAds

112 ஆவது வடக்கின் சமர் இன்று ஆரம்பம்

ஆசிரியர் - Admin
112 ஆவது வடக்கின் சமர் இன்று ஆரம்பம்

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 112ஆவது வடக்கின் சமர் எனப்­படும் வரு­டாந்த மாபெரும் கிரிக்கட் போட்டி யாழ். மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் இன்று முதல் சனிக்­கி­ழ­மை­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை பாட­சா­லைகள் மாபெரும் கிரிக்கெட் வர­லாற்றில் கொழும்பில் றோயல் – தோமஸ், மாத்­த­றையில் தோமஸ் – செர்­வே­ஷியஸ் ஆகிய போட்­டி­க­ளுக்கு அடுத்­த­தாக மூன்­றா­வது நீண்ட கால வர­லாற்றைக் கொண்­டது வடக்கின் சம­ராகும். அத்­துடன் இந்த மூன்று மாபெரும் கிரிக்கெட் போட்­டி­களே இலங்­கையில் மூன்று நாட்­களைக் கொண்ட பாட­சாலை கிரிக்கெட் போட்­டி­க­ளாக விளை­யா­டப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த வரு­டம்­வரை நடந்­து­மு­டிந்­துள்ள 111 வடக்கின் சமர்­களில் செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி 36 போட்­டி­க­ளிலும் மத்­திய கல்­லூரி 27 போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 40 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ள­துடன், 7 போட்­டி­களின் முடி­வுகள் பற்­றிய விப­ரங்கள் பதிவில் இல்லை. ஒரு போட்டி கைவி­டப்­பட்­டது.

செய்ன்ற் ஜோன்ஸ் அணி­யினர் கடந்த வருடம் எஸ். ஜெனின் ப்ளெமின் தலை­மையில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றி­ருந்­தனர். யாழ். மத்­திய கல்­லூரி கடை­சி­யாக 2011இல் ஜெரிக் துஷானின் தலை­மையில் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

2016, 2017 ஆகிய இரண்டு வரு­டங்­க­ளிலும் வெற்­றி­யீட்­டிய செய்ன்ற் ஜோன்ஸ், மூன்­றா­வது தொடர்ச்­சி­யான வெற்­றிக்கு குறி­வைத்து இவ் வருட வடக்கின் சமரை எதிர்­கொள்­கின்­றது.
கடந்த வருட சமரில் அரைச் சதம் குவித்து அதி சிறந்த துடுப்­பாட்ட வீர­ராகத் தெரி­வான வி. யதுசன் இவ் வருடம் செய்ன்ற் ஜோன்ஸ் அணியின் தலை­வ­ராக விளை­யா­டு­கின்றார்.

கடந்த வருட 67 ஓட்­டங்­க­ளுக்கு 10 விக்­கட்­களைக் கைப்­பற்றி சிறந்த பந்­து­வீச்­சாளர் மற்றும் ஆட்­ட­நா­யகன் ஆகிய இரண்டு விரு­து­க­ளையும் வென்­றெ­டுத்த கன­க­ரட்ணம் கபில்ராஜ் இவ் வருடம் உதவி அணித் தலை­ர­வாக இடம்­பெ­று­கின்றார்.

இதே­வேளை, யாழ். மத்­திய கல்­லூரி கடந்த இரண்டு வரு­டங்­களும் அடைந்த தோல்­வி­களை நிவர்த்தி செய்யும் குறிக்­கோ­ளுடன் இவ் வருடம் களம் இறங்­க­வுள்­ளது.நான்காம் வருட வீரர் சிவ­லிங்கம் தசோபன், யாழ். மத்­திய கல்­லூரி அணித் தலை­வ­ராக விளை­யா­டு­கின்றார். இவர் 2017 வடக்கின் சமரில் சிறந்த சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ராக தெரி­வா­கி­யி­ருந்தார்.

மேலும் நடப்பு பரு­வ­கா­லத்தில் கண்டி புனித அந்­தோ­னியார், அக்­கு­றணை அஸார் ஆகிய கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ராக இரண்டு சதங்­களைக் குவித்த தசோபன், இவ் வருட சமரில் திற­மையை வெளிப்­ப­டுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

துணிச்­ச­லுடன் துடுப்­பெ­டுத்­தாடும் ஸ்ரீஸ்­கந்­த­ராஜா கௌதமன் உதவி அணித் தலை­வ­ராக விளை­யா­டுக்­கின்றார். மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் வடக்கின் சமரில் அதி சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக இவர் தெரி­வா­கி­யி­ருந்தார்.

இந்த இரண்டு அணி­க­ளிலும் தலா மூன்று வீரர்­களே சிரேஷ்ட வீரர்­க­ளாக இடம்­பெ­று­வதால் அவர்கள் தத்­த­மது அணி­க­ளுக்கு அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர். அதேவேளை, இளஞ் சிங்கங்கள் பயம் அறியாது என்பதற்கு இணங்க முதலாம்., இரண்டாம் வருட வீரர்களும் தங்களது கல்லூரிகளை கௌரவ நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்ன்ற் ஜோன்ஸ் அணி­யினர்: அமர்ந்­தி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்து வல­மாக ஏ.டி.. சுரேந்­திரன் (பயிற்­றுநர்), வி. யதுஷன் (அணித் தலைவர்), வண. என்.ஜே. ஞானப்­பொன்­ராஜா (அதிபர்), கே. கபில்ராஜ் (உதவி அணித் தலைவர்), வி. குமணன் (விளை­யாட்­டுத்­துறை பொறுப்­பா­சி­ரியர்), மத்­திய வரி­சையில் ஜே. சுபீட்சன் திப்­பியூஸ், எஸ். ஜோயல் பிரவீன், வி. அபி­லக்ஷன், பி. எல்ஷான் டெனுஷன், ரி. டினோஷன், டி. ஷெரோபன், எம். அபிநாஷ், எஸ்.ஷானுஷன், என். சௌமியன், பின்­வ­ரி­சையில் என். ரதுஷன், ஏ. ஜதுஷன், எம். ஹேம­துஷன், ஜே. மரிய திலக்ஷன், என்.என். டிலக்சன், எஸ். பிரஷாந்த், டி. ஜோநதன் பிர­சன்னா, சி.பி. தனுஜன், எஸ். ஜேஜீவன்.

யாழ். மத்­திய அணி­யினர்: அமர்ந்­நி­ருப்­ப­வர்கள் இட­மி­ருந்து வல­மாக எஸ். சுரேஷ்­மோகன் (பயிற்­றுநர்), எஸ். சுஹீதன் (விளை­யாட்­டுத்­துறை பொறுப்­பா­சி­ரியர்), எஸ். தசோபன் (அணித் தலைவர்), எஸ்.கே. எழில்­வேந்தன் (அதிபர்), எஸ். கௌதமன் (உதவி அணித் தலைவர்), கெ. நிலக்ஷன் (பொறுப்­பா­சி­ரியர்), மத்­தி­ய­வ­ரி­சையில் எல். சாரங்கன், ரீ. கௌதமன், ரி. ஹர்­ஷன்னா, கே. இய­ல­ரசன், எஸ். நிஷான், எஸ். மதுசன், வி. வியாஸ்காந்த், எஸ். துஷாந்தன், எஸ். டிலே­சியன், ஆர். ராஜ்க்­ளின்டன், ஜே. விதுசன், பின்­வ­ரி­சையில் ரி. விதுசன், ஏ. ஜெய­தர்சன், எஸ். சுஜன், எஸ். நிதர்சன், எம். சன்சயன்.