இந்தியாவின் முதல் கடல் விமான பயணம்!! -பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார்-
இந்தியாவின் முதலாவது கடல் விமான சேவையை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நாட்டின் முதல் கடல் விமான சேவை இன்று வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியாவில் இருந்து சபர்மதி நதிக்கரை வரையிலான கடல் விமான சேவையை பிரதமர் மோடி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்தார்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கடல் விமானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடல் விமான சேவை இந்த பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.