யாழ்.போதனா வைத்தியசாலை நடத்தப்பட்ட 234 பேருக்கான பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! மருதங்கேணியில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை நடத்தப்பட்ட 234 பேருக்கான பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! மருதங்கேணியில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற 234 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி வடமாகாணத்திலிருந்து 234 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. 

இதன்போது வடமாகாணத்தில் புதிதாக ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 13 பேருக்கு நடத்தப்பட்ட

பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுதி 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பபடவுள்ளனர். 

Radio