முல்லைத்தீவில் வைத்தியசாலைக்குள் நுழைந்து இராணுவ அதிகாரி காட்டுமிராண்டித்தனம்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - வெலிஓயா வைத்தியசாலை வைத்தியரை மிக இழிவாக பேசியதுடன், வைத்தியர் சார்ந்த இனம் குறித்தும் இழிவாக பேசிய பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முறையிட்டுள்ளதுடன், 

முல்லைத்தீவு வெலிஓயா - சம்பத்நுவர வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகி கொள்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். 

Radio