கொரோனா சிகிச்சை நிலையங்களில் நெருக்கடி அதிகரிப்பு..! கிருஷ்ணபுரம், மாங்குளம் சிகிச்சை நிலையங்கள் அடுத்தவாரமே திறக்கப்படுகிறது, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடி நிலவுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

வடமாகாணத்தில் சிகிச்சை நிலையங்களில் மிகுந்த நெருக்கடியான நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே மருதங்கேணியில் 50 பேருக்கு சிகிச்சையளிக்க கூடிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கிருஸ்ணபுரம் பகுதியில் 200 பேருக்கான சிகிச்சை நிலையமும், மாங்குளம் பகுதியில் மற்றொரு சிகிச்சை நிலையமும் அமைக்கப்படுகின்றது. 

அடுத்தவாரம் குறித்த இரு நிலையங்களும் நிச்சயமாக திறக்கப்படும். மேலும் வடமாகாணத்தில் தேவையற்ற விழாக்கள், ஒன்றுகூடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை நாங்கள் அவதானிக்கிறோம். 

மக்கள் ஆபத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடக்கவேண்டியது அவசியம் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு