கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின..! 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I

பேலியகொட மற்றும் மினுவாங்கொட கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருக்கின்றது. 

குறிப்பாக கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களில் இருந்து அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொவிட் -19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் கூறியுள்ளது. 

மேலும் மேற்படி இரு கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி 5097 பேர் இந்த தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த கொத்தணியுடன் தொடர்புடைய நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. 

Radio