யாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டதில் பருத்துறை மற்றும் கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

பருத்துறையை சேர்ந்த ஒருவருக்கும், கரவெட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதேவேளை 28ம் திகதி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 243 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 பேருக்கும், தொன்பகுதியை சேர்ந்த 37 பேருக்கும் தொற்று உறுதி.

இந்நிலையில் யாழ்.மாவட்ட மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

Radio