24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு தொற்று!!

ஆசிரியர் - Editor III
24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு தொற்று!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43,893 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினமும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 43,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,90,322 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 508 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 58,439 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 

 கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,59,509 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 6,10,803 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 10 கோடியே 54 இலட்சத்து 87 ஆயிரத்து 680 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,66,786 இலட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு