மன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று..! இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

மன்னார் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கம் இன்றுவரை 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டி.வினோதன் கூறியுள்ளார். 

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மினுவாங்கொடை கொரோனா கொத்தனி பரவல் ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும், பேலியகொடை மீன் தொகுதி கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் 

அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த போக்குவரத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இதனடிப்படையில் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரெவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் பயணித்து 

 21 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 

கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தான எச்.எஸ்.ரெவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.

குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு 

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 

11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில் 

இருந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு