சூரரைப்போற்று நவம்பர் 12 இல் வெளியீடு!!

ஆசிரியர் - Editor III
சூரரைப்போற்று நவம்பர் 12 இல் வெளியீடு!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கொரோனா காரணமாக தள்ளிப்போனது. 7 மாதங்களாக தியேட்டர்கள்  மூடப்பட்டு இருப்பதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். 

இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி  ரிலீஸ் செய்யப்படுகிறது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு