சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் 226 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும், 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தில் உள்ளதாகவும் கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், 

வடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் போக்குவரத்து உள்ளிட்ட மக்களின் இயல்பு வாழ்வை குழப்பாத வகையில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது குறித்தும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறியிருக்கின்றார். 

மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் மாகாண கொரோனா தடுப்பு செயலணயின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களினதும் சமகால நிலமைகள் தனித்தனியாக ஆராயப்பட்டுள்ளதுடன், 5 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டிருக்கின்றது. 

விசேடமாக சுகாதார அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்ட சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதுடன் மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது. மேலும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். 

என்ற விடயமும் இந்த கலந்துரையாடலில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.மாவட்டத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில் 226 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதுடன், 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்திற்குள் கொரோனா தொற்று பரவாமலிருப்பதற்கு போக்குவரத்து உள்ளிட்ட இயல்பு வாழ்வை குழப்பாத வகையில் சகலரும் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றவேண்டும். மேலும் பொதுமக்கள் முடிந்தளவு தேவையற்ற நடமாட்டங்களை நிறுத்துவதுடன், 

அதனையும் மீறி நடமாடினால் தாம் எங்கு செல்கிறோம்? யாரை சந்திக்கிறோம்? என்ற விபரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அலுவலகங்களிலும் தமது ஊழியர்கள் தொடர்பான தகவல் திரட்டுக்களை வைத்திருக்கவேண்டும். 

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு வருவோர் தமது பதிவுகளை மேற்கொள்ளவேண்டும். என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் யாழ்.மாவட்டத்திலிருந்து கடல்வழியாக கடத்தலில் ஈடுபடுவது தொடர்பாகவும் உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. 

மேற்கண்டவாற யாழ்.மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு