கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..!

கொழும்பு பேலியகொட பகுதியில் வியாபாரம் செய்துவந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி வந்து மன்னாரில் பதுங்கிய ஒருவர் இன்று மாலை பிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்டவாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டி.வினோதன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

குறித்த நபர் கொழும்பு பேலிய கொட மீன் சந்தை பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் அங்கிருந்து தப்பி வந்த நிலையில் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தார் என்ற நிலையில் குறித்த நபர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகல்களுக்கு அமைவாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் கந்தக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி அறியும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

Radio