கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடை குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு - நெடுங்கேணி வீதி புனரமைப்பு பணிகளின்போது கொரோனா தொற்றுக்குள்ளான கிளிநோச்சி மாவட்ட செயலக ஊழியருடைய குடும்பத்தினருக்கு தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஒருவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Radio