அபாய வலயமான ஹம்பகா - சீதுவயிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் மீது நடவடிக்கை..! பேலியகொட சென்றுவந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மீனவர்களுக்கு பீ.சி.ஆர்..
ஹம்பகா - சீதுவ பகுதி அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து யாரும் வெளியேறகூடாது என்ற எச்சரிக்கையினையும் மீறி யாழ்ப்பாணம் வந்தவர்கள் மீதும் பேருந்தில் ஏற்றிவந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் கள ஆய்வுக்காக இன்று காலை சென்றிருந்த பணிப்பாளர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சீதுவையிலிருந்து யாழ்.நோக்கி வருகை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலில்சீதுவை பிரதேசமானது தனிப்படுத்தலிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியும் பேரூந்து வண்டியிலே அவர்கள் ஏற்றி வரப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒன்பது உத்தியோகத்தர்களை ஏற்றி வரப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக பொலிஸ்
திணைக்கள உத்தியோகத்தர்களும் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுமாக இணைந்து யாழ்.பேரூந்து நிலையத்தில் 22.10.2020அன்று இரவு 11மணிக்கு சம்பந்தபட்டவர்களை நாங்கள் அடையாள படுத்தினோம். இதில் ஒன்பது பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும்
அவர்கள் சுய தனிமைபடுத்தலில் தற்போது உள்ளார்கள் எனவும் தெரிவித்தார். அவர்களுடன் சேர்த்து பேரூந்து சாரதி, நடத்துனர் ஆகியோரையும் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பீ சீ ஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ள பட உள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து நாடு முழுவதும் பலருக்கு தொற்று உறுதியான நிலையில் யாழ் , மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பேலியகொடைக்கு விற்பனைக்காக குளிர்சாதன வண்டிகளில் மீன் எடுத்துச் செல்லப்படுகின்றது
அந்த அடிப்படையிலே குறித்த மாவட்டங்களிலிருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் மொத்த வியாபாரத்திற்காக செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்திலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் பல பாகங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வட மாகாணத்தில்
உள்ள மீன்பிடி துறைமுகங்களில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.