இலங்கையில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது..! உண்மையை உடைக்கிறது மருத்துவ அதிகாரிகள் சங்கம், 5 மாவட்டங்களில் அதியுச்ச அபாயம்..

ஆசிரியர் - Editor I

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுவதே சமூக தொற்று என கூறியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அளுத்கே, தற்போது சமூக தொற்று ஏற்பட்டுவிட்டது எனவும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவக்கூடிய பகுதிகளை அடையாளம் காணப்பட்ட பின்னர் உடனடியாக அப்பகுதியை முடக்க வேண்டும். இவ்வாறான முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்தாவிட்டால் வைரஸ் தொற்று பெருமளவில் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தொற்று ஏற்கனவே 13 மாவட்டங்களாக பரவியுள்ளது, மேலும் ஐந்து மாவட்டங்களில் பெரிய துணைக் கொத்துகள் பதிவாகியுள்ளன, இந்த துணைக் கொத்துகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக நாட்டினை முழுமையாக முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு