SuperTopAds

சீதுவை பகுதியில் அந்தரித்த 12 பேரை யாழ்ப்பாணம் ஏற்றிவந்த இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தலில்..! குறித்த 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
சீதுவை பகுதியில் அந்தரித்த 12 பேரை யாழ்ப்பாணம் ஏற்றிவந்த இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தலில்..! குறித்த 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்..

சீதுவைப் பகுதியில் பணம் இன்றித் தவித்த 12 பேரை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றி வந்த பேருந்தின் நடத்துநரும் சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கம்பஹா மினுவாங்கொட பிரண்டக்ஸ் ஆடைத் தொழிலகத்தில்பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 இளம் பெண்கள் கொரோனாத் தொற்றால் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டதாலும், 

கையிலிருந்த பணம் முடிவடைந்ததாலும் சொந்த ஊர் திரும்ப, சீதுவையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்று அங்கு வந்த யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்தில் ஏறியுள்ளனர். 

தம்மிடம் பணம் எதுவும் இல்லையெனத் தெரிவித்ததால், பயணச்சீட்டுக்களை வழங்கி அது தொடர்பாக நடத்துநர் யாழ்ப்பாணம் டிப்போவுக்கு அறிவித்துள்ளார். 

ருத்தித்துறையைச் சேர்ந்த 9 பேரும் நாவற் குழியைச் சேர்ந்த இருவரும் மிருசுவில் தெற் கைச் சேர்ந்த ஒருவருமாக 12 பேருடன் மேலும் மூவர் பேருந்தில் பயணித்துள்ளனர். 

பேருந்து இரவு 11.30 மணிக்கு யாழ்ப்பாணம்பேருந்து நிலையத்துக்கு வந்த போது அங்கு யாழ்ப்பாணம் மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், அவர்கள் அனைவரையும் 

பரிசோதனை செய்து தனிமைப்படுத்த லுக்கு உள்ளாக்கினர். பேருந்தின் சாரதியும் நடத்துநரும் குடும்பத்தினருடன் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

பேருந்தில் தமது பிள்ளைகள் வருவதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேருந்து நிலையத்துக்குச் சென்று பயணச்சீட்டுக்குரிய பணத்தைச் செலுத்தியுள்ளனர். 

கொரோனா பிரதேசம் என்று அறிந்தும் மனிதாபிமான அடிப்படையில் 12 இளம் பெண்களையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த நடத்து நரையும் சாரதியையும் மக்கள் பாராட்டியுள்ளனர்.