SuperTopAds

சசிகலா ஒரு வாரத்தில் விடுதலை!! -43 மாத கால சிறைக்கு வருகிறது முடிவு-

ஆசிரியர் - Editor III
சசிகலா ஒரு வாரத்தில் விடுதலை!! -43 மாத கால சிறைக்கு வருகிறது முடிவு-

சிறையில் உள்ள சசிகலா ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா,  தண்டனை அனுபவித்து வருகிறார். 

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் சசிகலாவின் சட்டத்தரணி ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.

எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்” எனக் கூறினார்.