யாழ்.மருதங்கேணி கொரோனா மருத்துவமமைனயில் 21 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்..! பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

நாட்டில் கொரோனா நோயாளிகள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வடக்கில் யாழ்ப்பாணம் மருதங்கேணியிலும், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியிலும் கொரோனா மருத்துவமனைகள் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மருதங்கேணி மருத்துவமனை நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் 21 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Radio