சிகிச்சை பெற்று திரும்பிய 3 பேருக்கு கொரோனா தொற்று..! வவுனியா வைத்தியசாலைக்குள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுப்பு..
வவுனியா - பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில்,
வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டு, இன்று காலை முதல் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பெருமளவு மக்கள் வீதிகளில் நிற்பதையும், அதானிக்க முடிகிறது.
மருத்துவர்கள், மற்றும் தாதியர்கள் மட்டும் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றது. இதேவளை வெளிநோயாளர் பிரிவு மூடப்பட்டமை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் எதனையும் கூறவில்லை.
எனினும் தொற்று நீக்கத்தின் பின்பே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.