SuperTopAds

6 பொலிஸ் குழுக்கள், ஒருவாரம் தேடுதல்..! றிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டார்..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீன் 6 பொலிஸ் குழுக்களின் ஒரு வார தேடுதலுக்கு பின்னர் கொழும்பு- தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க போக்குவரத்துச் சபையின் பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை அழைத்துச் சென்றதன் அடிப்படையில் பொது நிதிகளை குற்றவியல் முறையில் தவறாகப் பயன்படுத்துதல் 

மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரிஷாட் பதியூதீனைக் கைது செய்ய சட்ட மா அதிபர் பணித்திருந்தார். அதனடிப்படையில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் 6 அணிகள் 

அவரைக் கைது செய்ய கடந்த 14ஆம் திகதி முதல் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.கொழும்பு மற்றும் மன்னாரில் உள்ள பதியுதீனின் வீடுகளை குற்றவியல் விசாரணைப் பிரிவின் சோதனை செய்த போதிலும், 

அவர் அந்த வீடுகளில் இல்லை.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் மற்றும் மெய்பாதுகாவலரும் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் ஒரு வாரத்தின் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.