யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலரின் வேண்டுகோள், பீதியடையவேண்டாம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்..

ஆசிரியர் - Editor

யாழ்.மாவட்டத்தில் சமூக தொற்று ஏற்படவில்லை. மக்கள் பீதியடைய தேவையில்லை என கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார். 

ஹம்பகா- மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தபோது 

அவர் பயணித்த பேருந்து புத்தளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் அங்கிருந்து பருத்துறை இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். 

பின்னர் சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் புத்தளத்திலிருந்து அவர் பயணித்த இ.போ.ச பருத்துறை சாலைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவில் செய்யப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவும் அது சமூக தொற்று அல்ல. மக்கள் பீதியடைய தேவையில்லை. எனவும் சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளதுடன், யாழ்.மாவட்ட செயலரும் மக்களிடம் அதே கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

Radio