யாழ்.மருதங்கேணி கொரோனா மருத்துவமனை இன்று காலை உத்தியோகபூர்வமாக செயற்பட ஆரம்பிக்கிறது..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்.மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலை இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனைகள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்தில் மருத்தங்கேணி வைத்தியசாலையில் குறித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில், 

இன்றைய தினம் காலை 8 மணிக்கு அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 


Radio