யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 160 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 4 பேருக்கு தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 160 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 4 பேருக்கு தொற்று உறுதி, பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 160 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் பருத்துறை இ.போ.ச பேருந்து நடத்துனர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் அனுப்பபட்ட 160 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் யாழ்.பருத்துறை இ.போ.ச பேருந்து நடத்துனர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்று அடையாளம் காணப்பட்ட 4 போில் 

மிகுதி 3 பேர் ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வவுனியாவில் உள்ள தற்காலிக தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

Radio