”நான் சொன்னா கேட்பியா” -வைரலாகும் விஜய் பாடல்-

ஆசிரியர் - Editor II
”நான் சொன்னா கேட்பியா” -வைரலாகும் விஜய் பாடல்-

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத், நேற்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் 'Quit Pannuda' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியானது.

வெளியான சில நிமிடங்களில் லட்சத்திற்குமேல் பார்வையாளர்களை கடந்தது. மேலும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நான் சொன்ன கேட்பியா என்ற வரி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Radio