அதிகாலையில் நடந்த பயங்கரம்..! இரத்த வெள்ளத்தில் கிடந்த மூவர், இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்.. சந்தேகதில் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor

ஓமந்தை - மாணிக்கர்வளவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று அதிகாலை இரத்த வெள்ளத்தில் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் மீட்கப்பட்டபோதும் கவலைக்கிடமானமுறையில் இருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான கோபால் குகதாசன் (4 பிள்ளைகளின் தந்தை (வயது-40) மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் (வயது-34) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டடுள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Radio