ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்!! -9 பேர் அதிரடி கைது-

ஆசிரியர் - Editor II
ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்!! -9 பேர் அதிரடி கைது-

மத்திய பிரதேச மாநிலத்தில் ஐ.பி.எல் போட்டிகளை மையமாக வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அங்குள்ள இந்தூர் நகரின் கனடியா பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். 

தகவலை உறுதி செய்த போலீசார் நேற்று வியாழக்கிழமை கனடியா பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர். 

அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 15 செல்போன்கள் 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் கடந்த 11 ஆம் திகதி இந்தூர் ராஜேந்திரா நகரில் 6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Radio