முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாபெரும் போராட்டம்..! யாழ்.ஊடக அமைய ஒழுங்கமைப்பில் வடக்கு ஊடகவியலாளர்கள்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மாவட்ட செயலகம் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை, வன பரிபாலன திணைக்களம்  ஆகியவற்றின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலகத்தில் ஐனாதிபதிக்கான மகஜரும் ஏனையோரிடம் பிரதிகளுகளும் கையளிக்கப்பட்டது.

சட்டவிரோத மர கடத்தலை வெளிக் கொண்டுவரும் முகமாக செய்தி சேகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர்களான தவசீலன், குமணன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த தாக்குதலை கண்டித்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தின்போது ஐனாதிபதிக்கான மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மர கன்றுகளையும் வழங்கி மரங்களை அழிக்காதீர்கள், மர கடத்தல்காரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதே என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு