காதலை ஏற்க மறுத்த சிறுமி மீது அசிட் வீச்சு -இளைஞரை சுட்டுப் பிடித்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பஸ்கா கிராமத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த 8 தொடக்கம் 17 வயதான 3 சிறுமிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிஸ் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற இருவருக்கும் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள் கோண்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தப்பி ஓட முயற்சித்த ஆசிசை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர். 

விசாரணையில், மூன்று சகோதரிகளில் மூத்த பெண்ணை குறித்த நபர் ஒரு தலையாக காதலித்ததும், காதலை அந்தப் பெண் ஏற்காததால் ஆசிட் வீசினேன் என்று முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். 

Radio