திடீரென இடிந்து விழுந்த சுவர் -2 மாத குழந்தை ஒட்பட 10 பேர் பலி-

ஆசிரியர் - Editor II

ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாத குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் மழை காரணமாக ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த சுவரை ஒட்டியிருந்து 10 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதில் இரண்டு வீடுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.

இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் தங்களுடைய பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று புதன்கிழமை காலை நிலைவரப்படி 10 பேர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio