SuperTopAds

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீனை காணவில்லை..! கணக்காளர் கைது, 6 பொலிஸ் குழுக்கள் தொடர் தேடுதலில்..

ஆசிரியர் - Editor I

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு 6 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பு மற்றும் மன்னாரில் தேடுதல் நடத்தப்பட்டபோதும் அவரை காணவில்லை. என கூறப்படுகிறது. 

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச பேருந்து சேவை பஸ்களை பயன்படுத்தி இடம்பெயர்ந்த மக்களை வாக்களிக்க அழைத்துவந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள்

அடிப்படையில் றிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நேற்று மாலை அமைக்கப்பட்டு கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள அவருடைய இருப்பிடங்களில் தேடப்பட்டது. 

எனினும் அவர் தமது இருப்பிடங்களில் இல்லை. என கூறப்படுகின்றது. அதேவேளை அவருடைய கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மேலும் றிஷாட் பதியூதீன் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு உதவியதான குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அதனோடு றிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.